Friday, 28 December 2012

“மரணப்படுக்கையில் ஒர் நகரம் “




மேகங்களை 
சிறகினால் 
கிழிக்கும் 
விமானம்….!

ரோட்டில் 
கால்வைத்து 
நடக்கும் 
இரயில் பயணம் ….!

கடலுக்கு 
பெட்ரோல் 
போர்வைப்போடும் 
கட்டும்மர கப்பல் ….!

ஒசோனை 
தகர்த்தெறியும் 
முயற்சியில் 
தொழிற்சாலை….! 

ஒட்டுமொத்த 
உறவுக்களையும் 
கையில் பூட்டிக்கொண்ட 
தொலைப்பேசி ….!

மாட்டுச்சந்தைக்கு
சமமாக 
போட்டிபோடும் 
போக்குவரத்து ….!

மயான பூமிக்கும் 
முகப்பூச்சு 
பூசி விற்கும் 
ரியல் எஸ்டேட் ….!

பொருளாதாரத்தையும் ,
இன வேறுப்பாடையும் 
அழிக்கும் முயற்சியில் 
ஆடை ….!

குழந்தையை 
வீடு தங்கவிடா 
எண்ணத்தில் 
பெற்றவர் ….!

காப்பகத்திற்கு 
உதவித்தொகை 
வழங்கும் ஆசையில் 
மகன்….! 

பெத்தவன் 
வீடுச்செங்கல்லை 
பேர்த்து எடுக்கும் 
மகள் ….!

சொத்தை 
பிரிக்கும் வரை 
ஒருமைப்பாடு பாடும் 
சகோதரன் ….!


குழந்தைக்கு 
காதலியின் 
பெயர்சூடும் 
காதலன் ….!

மதில் மேல் 
பூனை போல் 
நிற்கும் 
காதலி ….!

கொசுவிடமும் 
இரத்தம்
ஊருஞ்சும் 
மென்பொருள் கட்டுமானம் ….!

நடைபாதையில் 
தூண்டைப்போட்டு 
இடம் பிடிக்கும் 
பிச்சைக்காரன் ….!

தண்ணி லாரிக்கு 
தெரு முனையில் 
காத்துகிடக்கும் 
பிளாஸ்டிக் குடம்….! 

உண்மையில் 
இது 
நகர வாழ்கை 
இல்லை 
தகர வாழ்கை .

இப்படிக்கு,  
தகரத்தில் வாழும்.., 
                          --இரா.சீ .சுகுமாரன் 

1 comment: