Friday, 23 June 2017

Related image

யாரு மச்சான் நீ ..,  என் FRIEND -டு டா ..!
போடு மச்சான் .., HASH TAG இது இப்போ   ட்ரெண்டு டா ..!
பிரச்சனை வந்தா  தோல் கொடுப்பான்
மச்சான்
Birthday  வந்த  ட்ரீட்  கொடுப்பான்

பொண்ணுகிட்ட  பேசினா
புகுந்து கெடுப்பான்
நண்பன் ..,
LOVE பண்றேன்னு சொன்ன
உயிர கொடுப்பான் ...!                 [ யாரு மச்சான் நீஎன் friend -டு டா .. ]

ஒரே தட்டுல தான் LUNCHU
புதுசுபுதுசா சொல்லுவோம்  பல  PUNCHU
செல்லம் ..,
நம்ம அப்பா அம்மா தான் வேறு
நீ இல்லாத எல்லா SUNDAY - வும்   போரு ...

இரவுல பைக் எடுத்து சுத்துவோம் ..,
காலி ரோட்டுல கத்துவோம் ..,
சண்ட வந்தா அடிச்சிக்குவோம் ..,
அடுத்த நிமிடமே  கடிச்சிக்குவோம்  ....   [யாரு மச்சான் நீஎன் friend -டு டா .. ]

புதுப்படம் எதையும் விட்டதில்லை..,  
நட்பால யாரும் கெட்டதில்லை..,
கண்ணு ..!
கஷ்டம்னு  வந்த விடமாட்டோம் ..!
பிடிக்காத  விஷயத்தை தொடமாட்டோம் ..!

கடைசி மூச்சு வரை 
நாம் இணைந்திருப்போம் ..,
ஒரு நாள் நாம்  பிரிந்திருப்போம்..,
அன்று நாம் இறந்து இருப்போம் .. ... [ யாரு மச்சான் நீஎன் friend -டு டா .. ]

             ---இரா.சீ .சுகுமாரன்

Thursday, 22 June 2017

என்னோடு வா நீண்ட தூரம்

Image result for couple  with royal enfield

அன்பே..
என்னோடு வா நீண்ட தூரம் ..
போகலாம் நாம்  சாலை ஓரம் ..
மேனியை  தழுவும் காற்றின் ஈரம் ..
மெல்ல கரையுதே
மனதின் பாரம்..!

கையோடு கைசேர்த்து ..,
விரலிடையில் விரல் கோர்த்து ..,
கொஞ்சம் இறுக்கினேன் ,
சற்று முறுக்கினேன் ..,
அப்போது நீ
போட்ட  சத்தம் ..
அதை நான்
கேட்க வேண்டும் நித்தம்            .. [அன்பே.. என்னோடு வா நீண்ட தூரம் ..]


உன் கண்கள் வழியே
என்னை பார்த்தேன்
அதன் வழியே
இந்த உலகை பார்த்தேன் ..!

புவி ஈர்ப்பு சக்தியினாலே
பாதங்களை நீ பூமியில் வைத்தாய்
உன்மேல் கொண்ட ஈர்ப்பினாலே
என்னையே உன்மேல் வைத்தேன்             .. [அன்பே.. என்னோடு வா நீண்ட தூரம் ..]

தனிமையில் நீயும் நானும் சென்றால்
வேகம் கொஞ்சம் கூடும்
தன்னிலை மறந்து நாவும்
ஞானியின் பாடல் பாடும்

மேகங்கள் ஒன்று  கூடி
நீ இருக்கும் இடத்தை தேடி
தூவி செல்லும் மழை துளி
யாவும்
புல்லின் மேல்கொண்ட
பனி துளி...                                                 .. [அன்பே.. என்னோடு வா நீண்ட தூரம் ..]

காதல் எனும் சாவியை தொடுத்து
நினைத்தபடி பயணத்தை நடத்து.....

                                                - இரா.சீ .சுகுமாரன்


[குறிப்பு: பைக்கை  ரசித்து எழுதியது. இப்பொது மீண்டும் ஒரு முறை மேலிருந்து படித்து பார்க்கவும்..]