அன்பே..
என்னோடு வா நீண்ட தூரம் ..
போகலாம் நாம் சாலை ஓரம் ..
மேனியை தழுவும் காற்றின் ஈரம் ..
மெல்ல கரையுதே
மனதின் பாரம்..!
கையோடு கைசேர்த்து ..,
விரலிடையில் விரல் கோர்த்து ..,
கொஞ்சம் இறுக்கினேன் ,
சற்று முறுக்கினேன் ..,
அப்போது நீ
போட்ட சத்தம் ..
அதை நான்
கேட்க வேண்டும் நித்தம் ..
[அன்பே.. என்னோடு வா நீண்ட தூரம் ..]
உன் கண்கள் வழியே
என்னை பார்த்தேன்
அதன் வழியே
இந்த உலகை பார்த்தேன் ..!
புவி ஈர்ப்பு சக்தியினாலே
பாதங்களை நீ பூமியில் வைத்தாய்
உன்மேல் கொண்ட ஈர்ப்பினாலே
என்னையே உன்மேல் வைத்தேன் .. [அன்பே.. என்னோடு வா நீண்ட தூரம் ..]
தனிமையில் நீயும் நானும் சென்றால்
வேகம் கொஞ்சம் கூடும்
தன்னிலை மறந்து நாவும்
ஞானியின் பாடல் பாடும்
மேகங்கள் ஒன்று கூடி
நீ இருக்கும் இடத்தை தேடி
தூவி செல்லும் மழை துளி
யாவும்
புல்லின் மேல்கொண்ட
பனி துளி... .. [அன்பே.. என்னோடு வா நீண்ட தூரம் ..]
காதல் எனும் சாவியை தொடுத்து
நினைத்தபடி பயணத்தை நடத்து.....
- இரா.சீ .சுகுமாரன்
[குறிப்பு: பைக்கை ரசித்து எழுதியது. இப்பொது மீண்டும் ஒரு முறை மேலிருந்து படித்து பார்க்கவும்..]
No comments:
Post a Comment