Wednesday, 5 July 2017

மாறனும் சமுதாயம் - ஊசி வெடிகள்

Image result for bijli vedi



skype - ல காதல்
சொல்லி ,
webex -ல கல்யாணம்
பண்ணுவான் ...
இந்த
மானிட்டருக்கு
வாக்குப்பட்டவன் ...!   #IT People
------------------------------------------------------------

பொண்டாட்டிய
தொலைச்சாலும்
google -ல தான்
தேடுவான்               #IT People
---------------------------------------------------

இவன்,
WIFI காட்டில்
வசிக்கும்
வினோத மிருகம்    #IT People
---------------------------------------------------------

நாட்டின்
முதுகு எலும்பு
முறிந்துவிட்டதாக
x-ray
காட்டுகிறது

முதல் உதவி
மிக அவசியம்   #Agriculture

-----------------------------------------------------------

கோட்டர்  விலையும்
வாட்டர்  விலையும்
ஒன்னாயிடுச்சு ..!

பீட்டரு
ப்ளீஸ்
சேவ் வாட்டரு  #Save Water

----------------------------------------------------------

மனித கூட்டில்
உன்னை சேர்க்க
மறந்தோம்
குருட்டு பிறவியாய்   #Transgender

----------------------------------------------------------

வள்ளுவனே
சொல்லிவிட்டான்
முப்பால் என்று ..!

நீங்கள்
அப்பால் செல்வது
ஏன் ..?    #Transgender

----------------------------------------------------------

ஆண் - பெண்
சமவுரிமை
சண்டையில்
அவளும் விலக்கி
அவனும் ஒதுக்கி
சமுதாய வட்டத்திற்கு
வெளியே
நிறுத்திவிட்டார்கள்  #Transgender












No comments:

Post a Comment