ஆளுக்கும் வாய்க்கும்
சம்மந்தமே இல்லை ..!
பழகாத வரைக்கும்
தெரியப்போவதும் இல்லை ..!
விளயாட்டு பேருல
சேட்டை பண்ணும் தொல்லை
சும்மா சொன்னேன் ROWDY
நீ பாசக்கார பிள்ளை ...!
அரை கிலோ எடை ஏறினாலும்
ஆறு நாளைக்கு பீல் பண்ணுவ..,
உனக்கு ஜிம் ஒரு கேடா ..?
கதவை தொறக்கவே 2 பேரு கேட்ப ..!
கொஞ்சம் நெஞ்சமா பண்ணி இருக்க
அவ்ளோவும் Torture -U
All the best for your
Beautiful Future-U
கொஞ்சம் செண்டிமெண்ட் எடுத்துக்குறேன் ..,
கடந்து வந்த பாதையை
படிக்கட்டுகள் சொல்லும் ,
கதை அடித்த காலத்தை
டீ கடைகள் காட்டும் ,
நான் என்ன செய்கிறேன் என்று
நீ எட்டி பார்ப்பதும் ..,
நீ என்ன செய்கிறாய் என்று
நான் தட்டி கேட்பதும் ..,
சுவாரசியமான நிமிடங்கள்
இனி கிடைக்குமா
அந்த தருணங்கள் ...?
ஒரு நாள் நீ விடுப்பு எடுத்தாலும்
கடுப்பில் திரியும் எனக்கு ,
மொத்தமா விட்டுட்டு போறியே
இது யாரு போட்ட கணக்கு ..?
கிண்டர் ஜாய் சாப்பிடும் குட்டி பொண்ணு ..,
அடிக்கடி நாம மீட் பண்ணலாம் கண்ணு ..
மறக்காம ஒழுங்கா டெய்லி போன் பண்ணு ..
சீன கொறச்சிகோ
கொஞ்சம் சிரிச்சிக்கோ
வைட்டமின் -D சேத்துக்கோ
ஒடம்ப நல்லா பாத்துக்கோ ..!
என்றும் பிரியமுடன் ,
இரா.சி .சுகுமாரன்
No comments:
Post a Comment