Monday, 17 July 2017

முதல் முத்தம்

Related image


தெய்வத்தின் கருவறை  போல..,
கருவில் என்னை
சுமந்த உன்னை..,
நினைத்து பார்த்தேன்
மெய்  சிலிர்த்தேன் ...!

பத்து மாதமும் உள்ளவச்சு
பக்குவமா பாத்துக்கிட்ட ..,
பத்தியத்த கடைப்பிடிச்சு
பச்ச மன்ன பெத்தெடுத்த ..!

தாயே ., என் தாயே ..,
தொப்புல் கொடி அறுத்தாச்சு..,
தொட்டியில போட்டாச்சு ..,
நீ  பார்க்கையில்
நான் அழுகிறேன் ..,
நான் பார்க்கையில்
நீ சிரிக்கிறாய் ....!

உன் சிரிப்பின் அர்த்தம்
நான் அறிவேன்  தாயே ..,
என் அழுகையின்
காரணம் உணர்வாயோ நீயே ..?

என்னை பெத்தெடுக்க நீ
பட்ட வலியை உணர்ந்தேன் ..,
வந்த உடனே அம்மா என்று
அழைக்க பேச்சு வராமல் அழுதேன் ..!

உன்னை மறப்பேன் ..,
அன்றே இறப்பேன் ..!

உன் முதல்  முத்தத்தின்
கதகதப்பில்
உயிர் வாழ்கிறேன்..!

   --------இரா. சீ . சுகுமாரன் 

1 comment: