Tuesday, 25 July 2017

வாசனை

Related image

புவி மீது
காதல் கவி
பாட  மைசிந்திய
விண்வெளி ..!

மின்னல் ஒளி
அனுப்பி பின்
இடி எழுப்பி
நித்தமும்,
முத்தம் தூவிய
மழைத்துளி..!

செய்தி கொணர்ந்த தூதுவனோ..,
இணைக்க வந்த தரகனோ ..,
கூலி  வாங்காமல் விடுவானோ..?

பதட்டத்தில் வேர்த்துப்போன
பெண் போல
மொத்தமும் நனைந்து
நின்ற மண் ..,

கொடுத்த பரிசு
"மண் வாசனை "

செயிடம் கண்ட
"தாய் வாசனை "

No comments:

Post a Comment