Sunday, 30 July 2017
Tuesday, 25 July 2017
போராளி
காலை விருந்தினராய்
மாலை வீடு திரும்பும்
நீ,
உன்னை உருக்கி
உலகம் விழிக்க ஒளி கொடுத்தாய் ..!
இருளை விரட்ட போர் தொடுத்தாய் ..!
இரவு முழுக்க விடாமுயற்சி
விடிந்த பின் வெற்றி மலர்ச்சி
சூரியனே,
நீ ஒரு சான்று தான்
விடாமல் முயற்சி புரியும்
போராளிகளுக்கு ...!
வாசனை
புவி மீது
காதல் கவி
பாட மைசிந்திய
விண்வெளி ..!
மின்னல் ஒளி
அனுப்பி பின்
இடி எழுப்பி
நித்தமும்,
முத்தம் தூவிய
மழைத்துளி..!
செய்தி கொணர்ந்த தூதுவனோ..,
இணைக்க வந்த தரகனோ ..,
கூலி வாங்காமல் விடுவானோ..?
பதட்டத்தில் வேர்த்துப்போன
பெண் போல
மொத்தமும் நனைந்து
நின்ற மண் ..,
கொடுத்த பரிசு
"மண் வாசனை "
செயிடம் கண்ட
"தாய் வாசனை "
Monday, 17 July 2017
முதல் முத்தம்
தெய்வத்தின் கருவறை போல..,
கருவில் என்னை
சுமந்த உன்னை..,
நினைத்து பார்த்தேன்
மெய் சிலிர்த்தேன் ...!
பத்து மாதமும் உள்ளவச்சு
பக்குவமா பாத்துக்கிட்ட ..,
பத்தியத்த கடைப்பிடிச்சு
பச்ச மன்ன பெத்தெடுத்த ..!
தாயே ., என் தாயே ..,
தொப்புல் கொடி அறுத்தாச்சு..,
தொட்டியில போட்டாச்சு ..,
நீ பார்க்கையில்
நான் அழுகிறேன் ..,
நான் பார்க்கையில்
நீ சிரிக்கிறாய் ....!
உன் சிரிப்பின் அர்த்தம்
நான் அறிவேன் தாயே ..,
என் அழுகையின்
காரணம் உணர்வாயோ நீயே ..?
என்னை பெத்தெடுக்க நீ
பட்ட வலியை உணர்ந்தேன் ..,
வந்த உடனே அம்மா என்று
அழைக்க பேச்சு வராமல் அழுதேன் ..!
உன்னை மறப்பேன் ..,
அன்றே இறப்பேன் ..!
உன் முதல் முத்தத்தின்
கதகதப்பில்
உயிர் வாழ்கிறேன்..!
--------இரா. சீ . சுகுமாரன்
Sunday, 16 July 2017
சிறுமை கண்டு பொங்குவாய்
தாயையும் தாரத்தையும்
வதைக்கும் அரக்கனோ..,
சிசுவையும் யாசகம்
ஏந்த வைக்கும் கயவனோ..,
மருத்துவ பணத்தை
திருடும் கள்வனோ..,
முதியோரை முறைத்து
பேசும் மடையனோ..,
பிடித்த பெண்ணிடமே
அமிலம் எரியும் வெறியனோ..,
தனிமை அறிந்து அவளிடம்
அவலம் புரியும் காமனோ..,
மீதம் சில்லறை தராமல்
சுருட்டும் பேருந்து நடத்துனரோ..,
பிரசவ வண்டியை மடக்கி
வசூலிக்கும் போக்குவரத்து காவலரோ ..,
பெண் கேட்டு வந்த இடத்தில
பொன் கேட்கும் மாமனோ..,
சாதித்த ஒருவனை கூட்டிவந்து
எங்க சாதி என்று சொன்னவனோ ..,
கண்ணில் பட்டால் , உனக்கு
காந்தியே கோல் கொடுப்பார்,
கட்டபொம்மன் வாள் கொடுப்பார்,
பாரதியும் தோள் கொடுப்பார்,
விடாதே விரட்டு .., மக்களை திரட்டு..,
கடுமையாய் மிரட்டு .., விடியட்டும் இருட்டு ..!
---- இரா.சீ .சுகுமாரன்
Thursday, 6 July 2017
தீண்டாமையை தீயிடு
ஒருவர் நோக
ஒருவர் வாழும் தேசமே ..
சாதியெனும் சாக்கடையில்
நீந்துவது மோசமே ...!
விட்டு வெளியே வா ..,
மலர் கொண்டு அழைக்கும்
இளைய சமுதாயம் ..,
மழை தூவி சிரிக்கும்
அந்த ஆகாயம் ...!
அரக்கனோட மூத்த பிள்ளை
வெட்டின கத்திமேல குத்தமில்லை
வெட்டினவன் புத்திக்குத்தான் பாசமில்லை
பொத்தி வளர்த்த என் பொட்ட புள்ள
தல முடிய புடிச்சி இழுத்துவாளே ..!
துடிச்சு சாகட்டும்டா கீரிப்புள்ள
நான் தான்
அரக்கனோட மூத்த பிள்ளை ...!
Wednesday, 5 July 2017
மாறனும் சமுதாயம் - ஊசி வெடிகள்
skype - ல காதல்
சொல்லி ,
webex -ல கல்யாணம்
பண்ணுவான் ...
இந்த
மானிட்டருக்கு
வாக்குப்பட்டவன் ...! #IT People
------------------------------------------------------------
பொண்டாட்டிய
தொலைச்சாலும்
google -ல தான்
தேடுவான் #IT People
---------------------------------------------------
இவன்,
WIFI காட்டில்
வசிக்கும்
வினோத மிருகம் #IT People
---------------------------------------------------------
நாட்டின்
முதுகு எலும்பு
முறிந்துவிட்டதாக
x-ray
காட்டுகிறது
முதல் உதவி
மிக அவசியம் #Agriculture
-----------------------------------------------------------
கோட்டர் விலையும்
வாட்டர் விலையும்
ஒன்னாயிடுச்சு ..!
பீட்டரு
ப்ளீஸ்
சேவ் வாட்டரு #Save Water
----------------------------------------------------------
மனித கூட்டில்
உன்னை சேர்க்க
மறந்தோம்
குருட்டு பிறவியாய் #Transgender
----------------------------------------------------------
வள்ளுவனே
சொல்லிவிட்டான்
முப்பால் என்று ..!
நீங்கள்
அப்பால் செல்வது
ஏன் ..? #Transgender
----------------------------------------------------------
ஆண் - பெண்
சமவுரிமை
சண்டையில்
அவளும் விலக்கி
அவனும் ஒதுக்கி
சமுதாய வட்டத்திற்கு
வெளியே
நிறுத்திவிட்டார்கள் #Transgender
Subscribe to:
Posts (Atom)