Wednesday 18 July 2012

கொளுத்து வேலை



பாதமிரண்டும் பாரங்கல்லு ,
கையிரண்டும் கட்டுமரம் ,
உள்ளம்மட்டும் எதுக்கு..
உனக்கு பூவாபோச்சு …..!
கல்லு தூக்கி மூளை இப்போ 
நஞ்சி நாராய்ப் போச்சு …!

களிமண்ண சூடுவட்சா..,
செங்கல்லுனு சொன்ன..,
வாழ்கையே சூடுபட்டு
விரச்சிப்போய் நின்ன...!

வாங்கி வந்த கூலி ..
வீடு வரும்போதே காலி …!
மார்வாடியில் தூங்குது ..,
அவளோட தாலி...!

ஊருக்கே வீடு செய்தவன்..
உனக்கு ஒரு வீடுயில்லை…! 
உன்னப்பத்தி நினைத்துபார்க்க
மக்களுக்கு நாதியில்லை .....!
                    --- இரா.சீ.சுகுமாரன் 

இதயத்தின் வலி


சந்திரனே..,
உயிரோடு தேயும் உனக்கு ..,
வலிக்காமல் இருக்க என் செய்வாய்...?

பூங்காற்றே ..,
மனிதர்கள் சுவாசிக்கும்போது..,
வலிக்காமல் இருக்க என் செய்வாய்...?

ரோஜாக்களே..,
முற்கள் மேல்  தவம்  புறிகின்றாயே.,
வலிக்காமல் இருக்க என் செய்வாய்...?

நிரருவிகளே..,
மலைமேல் இருந்து விழும்போது 
வலிக்காமல் இருக்க என் செய்வாய்...?

போர்வீரர்களே..,
வாளால் வெட்டுப்பட்டு சிதையும்போது  
வலிக்காமல் இருக்க என் செய்வாய்...?

நெர்சோலைகளே..,
அறுவடையில் உன்னை வெளுக்கும்போது 
வலிக்காமல் இருக்க என் செய்வாய்...?

சொல் என் தமிழ் மொழிக்கு ..,
தமிழனே .,
தமிழை கேலிபேசும் நிலையில் .,
வலிகிறதே என் இதயம் …!
                    --- இரா.சீ.சுகுமாரன் 

பட்டணம்


பட்டது போதும் மச்சி.,
பட்டணம் போதும்..!
ஊருக்கு போயி ,
நீ விவசாயம் செய்யி..!

மூளையை கசக்கி .,
எவனுக்கோ உழைக்குற ..!
வாங்கின சுதந்திரம்.,
அதையேன் கடலில் கரைக்குற ..!

இன்றைய செயற்கை வாழ்கை
ஒரு மூகமூடிப்போலத்தான் .
அதை கழுற்றி ஏறிட 
முகத்தை நீ பாரடா ..!

செயற்கைக்கு சோற்று போட்டு 
சோம்பேறியானது போதும்..!

திங்குற சோத்துல
சாப்ட்வேர் இல்ல ..!
கட்டுற  வேட்டில 
ஹார்ட்வேர் இல்ல ..!

இது சீக்கிரம் உனக்கு 
தெரியும் 
அப்போத்தான் 
இந்த வரிகளின் 
அருமைப்புரியும் ...!
                    --- இரா.சீ.சுகுமாரன் 

கவிப்பேரரசு




தாய்க்கு,
தாய்மையுட்டி..
தந்தைக்கு,
பெருமையுட்டி..
பாசத்திற்கு, 
பாலுட்டி .. 
பல சரணம் செய்தாய்..!
ஐயா..,
உனக்கு என் முதல் சரணம் ..!

வைரமும்
ரத்தினம்தான், 
முத்துவும்
ரத்தினம்தான் ,
வைரமுத்துவாகிய  நீயோ…,
தமிழின் இரத்தம்
என்பது உண்மைதான் ..!

பாரதிக்குப்பின்
உன் எழுத்தில்
தான்னையா.., 
தமிழ்மொழி 
மீசை முறுக்கியது..!

சலவை செய்த 
வார்த்தைகள் 
என்னை
சில்லிர்கவ்வைகிறது..! 

சாதாரண 
ஒருத்தனையும் 
சாகசம் 
செய்யவ்வைகிறது ..!

உன் படைப்பில் 
கிடைக்காத 
தமிழ் வார்த்தைகளே இல்லை ..

உன் எழுத்துக்கு 
மயங்காத 
ஒரு தமிழனும் இல்லை 
                    --- இரா.சீ.சுகுமாரன் 

அன்புள்ள அப்பாவுக்கு


கையை பிடித்து 
நடக்கவைப்பதில்
இருந்து ..,
படிக்கவைத்தது வரை 
என் பங்கைவிட 
உன் பங்குதான் 
பெரும்ப்பகுதி …!

உன்னால்தான்
வந்தது 
எனக்கு 
இந்த தகுதி ..!

நான் கேட்ப்பது
இமயமாக இருந்தாலும்
சமயம் பார்த்து 
வாங்கித்தரும் தந்தையே ..!

கல்லூரிக்கு போக 
வாரவாரம் 
இரவு
இரண்டும்மணிவரை 
என்னுடன் 
காத்திருந்து 
வண்டியேத்தி விடுவாய்யே..! 
அப்பப்பா 
யாருக்கு வரும் இந்த பொறுமை 
அப்பா 
உனக்கு தானே இந்த பெருமை 


வேலைக்கு நான்சென்றும் கூட 
இன்னும் 
எனக்கு
கைகாசு கொடுப்பாயேபா..,
இது
ஒன்னுப்போதாதா 
உன்
அன்பைச்சொல்ல

ஒரு கரித்துண்டை 
வெட்டி  
வைரமாக்கினாய் ..!
ஒரு விதையை 
வளர்த்து
மரமாக்கினாய் ..!

பத்து மாதம் சுமந்த தாய்
தெய்வம் என்றால்..?
நீ 
தெய்வத்திற்கும் மேலப்பா.....! 
                    --- இரா.சீ.சுகுமாரன் 

தாய் உருவில் தெய்வம்

அம்மா.,
உன் பாசத்தை மிஞ்ச யாருமில்லை
பார்க்க ஏங்குதே
உன் செல்ல பிள்ளை..!


தாய்மொழியாய்..,
தமிழும் இருக்கு
உன்னைப்பாட வார்தைப்போதத ..!

தாய் உருவில்..,
தெய்வம்மிருக்கு
உன்னைவிட்ட எனக்கு வேறுயாரு..!

என் பசியறிந்து
நீ சோறு வைச்ச ..,
உன் பசியை
நீ எதுக்கு மறைச்ச ..!

நான் சிரிச்சா
நீயும் சிரிச்ச...,
உன் சிரிப்பை
என்னம்மா எனக்குள் புதைச்ச.. !

கோடி செல்வம் வந்தாலும்
உன் பாசத்திற்கு ஈடாகும..
வான்மழை அழுகிறதே
அதற்கு உன்போல
ஓரு தாய் இல்லையம்மா ....!

Wednesday 11 July 2012

“கண்னெதிரே தோன்றினால் “





மாலை நேரம்..,
செந்தூர வானம்…!

செல்லும் பாதையில்..,
மால்லிகை    வாசம்..!

மெல்லிய காற்று..,
மேணியை தழுவிடும் பொழுது ..!

மழைச்சாரல் .,
என்னை அனைத்திடும் பொழுது .,
கண்டேன் ஒரு பெண்ணை .
நம்பமுடியவில்லை என் கண்ணை .

மழைநிர்   மண்ணில் துள்ள .,
அவள் அழகை நன் அள்ள.,
சருகி விழுந்ததே என் இதயம் .
துளைந்து விட்டது அந்த சமயம் .
கிடைக்கவில்லை ஒரு தடயம் .


அன்று .,
என்பார்வையில் இருந்து தப்பிவிட்டாள்
என் இதயத்தில் இருந்து அல்ல

காண்பேனா நான் மீண்டும்
கண்டுகொண்டேனே நானும் 

அவள் கண்விழ்த்த பின்பு தான் 
பூக்களும்  பூத்து வின்னைப்பார்கும்

அவள் பேசிப்போன பின்புதான் 
 குயில்கள் கூட பாடத்துவங்கும்..!

அவள் நடந்துப்போன பின்புதான்,
உலகமும்  நடைமுறைக்கு இயங்கும்..!
எனக்கென பிறந்தது அவள்தானா..!
காத்திருந்தது என் பலன்தானா..!

ஓர் நாள் நாங்கள் கைகோர்த்து நடப்போம்
இது முடிவு வரிகள் இல்லை
என் காதலின் ஆரம்ப வரிகள்...