Tuesday 2 October 2018

அறுவடை செய்த கறுப்பு வைக்கோல்

Image result for yennai arindhaal ajith

அடிக்கடி அவள் கன்னங்களை
தூர் வாருவது வழக்கம்..
எனக்கென்னவோ அதில் ஒரு
அற்பமான மகிழ்ச்சி..

பல சமயங்களில்
அவள் கைவிரல்களால்
அவற்றைப் பிடுங்கி எறிய முயற்சித்ததுண்டு..!
ஊசி போல அவை குத்திட ,
வலியில் அவள் சிணுங்கியதுண்டு..!
பதிலுக்கு அவள் பிடித்து இழுக்க,
பதறிப்போய் நான் கதறியதுண்டு..!

அன்பு சண்டைக்கு.
தினம் தினம் அரங்கேற்றம் தான்..
இடையில்..,
ஒரு வார பிரிவுக்குப்பின் சந்திக்கிறோம்..

இம்முறை நான்  தூர்வார வில்லை.,
ஆசையில் முத்தமிடவே சென்றேன் ..
எதிர்பாராமல் அவை கன்னங்களை பொத்தலிட
கன்னம் சிவந்து அழுகிறாள் ..,
இம்முறை அவற்றைப் பிடுங்கி எறிய
அவள் முயற்சிக்கவில்லை..
ஆனால்  ஏனோ வலிக்கிறது ..?

கத்தியால் அந்தக் கறுப்பு வைக்கோல்களை
நானே அறுவடை செய்தேன்...
அடுத்தநாள் என்  மகள் , மீசை அறுந்த இடங்களை
தடவி தடவிப் பார்த்து சிரித்தாள் ..
ஒருமுறை சொர்க்கத்திற்கே சென்று விட்டு வந்தேன்..!

#மாறன்

Thursday 2 August 2018

காற்றிலே உருகி


Image result for music in nature


பாடல்  : காற்றிலே  உருகி
இசையமைப்பாளர்:  Francis Raja
வரிகள்: மாறன்

பல்லவி:

காற்றிலே  உருகி
மூங்கிலில் முழுகி
இசையாய்  நான்  மாறவா

மேளத்தை  கொண்டு
தாளத்தை  மொண்டு
செவிவிருந்து  தான்  போடவா

மிளிரும் விண்மீன்கள்  சேர்த்து 
புது  மெட்டு தான்   செய்யலாம்

அதில்  மீசை  கவியின் வரிகளை
தைத்து  கானமாய்  மாற்றலாம்

(காற்றிலே  உருகி மூங்கிலில் முழுகி )

சரணம் 1:
குயிலினத்தை  அழைத்து  தான்
நாம்
போட்டி ஒன்று   நடத்தலாம்

அதில்  வென்ற  வந்த குயிலுக்கே
ஒரு
பாடல் வாய்ப்பை வழங்கலாம்

சோகத்தை இன்றே நீயும்   ஓரம் கட்டு
உன் மனதில் வந்து ஓட்டும் என் பாட்டு

(காற்றிலே  உருகி மூங்கிலில் முழுகி )

சரணம் 2:
இசை இல்லா வாழ்கை தான்  என்னாகுமோ
நீரற்ற பூமிக்கு இணையாகுமோ ..

தாலாட்டி  வளர்த்த என் தாயின் தமிழ் பாட்டு
ஒப்பாரி வரைக்கும்  வருமே அது என்னோடு

அன்பால் அகிலத்தை  கட்டி
திசையெங்கும்
இசையால் 
உணவளிப்போம்

(காற்றிலே  உருகி மூங்கிலில் முழுகி )



Saturday 28 October 2017

சின்னச் சின்ன ஆசை

சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை

டெங்குவை நித்தம் ஒழித்துவிட ஆசை 
மருத்துவத்தை இலவசமாய்  பெற்றுவிட  ஆசை 

சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை

GST-யை மொத்தமா கழித்துவிட ஆசை 
வரிகள் இல்லா பூமியா மாற்றிவிட  ஆசை

சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை

ஏரிகளை எல்லாம் துறு வார ஆசை 
பாரி போல நாமும் குளங்கள் கட்ட ஆசை 

விவசாயம்  நித்தம் பசுமை பெற ஆசை 
அரசாங்கம் வந்து உதவி செய்ய ஆசை 
ஏறு உழும் கைகள் ஓங்கி நிற்க ஆசை 

சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை

கந்துவட்டியை மொத்தமா ஒழித்துவிட ஆசை 
எரிந்து போன குடும்பம் திரும்ப  வர ஆசை

படிச்ச பயலுக எல்லாம் வேலை பெற ஆசை 
புடிச்ச துறையில்  உழைத்து வெற்றி  பெற ஆசை 

கார்ப்ரேட் கையில்  இருந்து நாட்டை மீட்டெடுக்க ஆசை 
மீட்டெடுத்த நாட்டில் நீட்டை  தடை புரிய ஆசை 
மாற்றம் கொண்டு நாடு மாறிவிட ஆசை 

சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை

காசு வாங்காம மக்கள் ஓட்டு போட ஆசை 
ஜெயித்து வரும்  தலைவன்   நலன்  புரிய ஆசை 


Monday 16 October 2017

என் ராஜாவின் ரோஜா நானே


முழுமதி  நிலவே,
இரவுகள் உனதே,
உறக்கம் துளைத்தேன் ,
உன்னோடு கவி  களித்தேன்..!

தனிமையில் சிரித்தேன்,
தலைவனை நினைத்தேன்,
ஏக்கம் துறந்தேன், 
கனவோடு காலம் கழித்தேன்..

உனக்கென பிறந்தேனா ..?
உண்மை  தானா?
உடன் சேராமல் போனால்
நான் உயிர் வாழ்ந்திடுவேனா ..?

இமைக்காமல் பார்த்தேனே ..,
மாயா கண்ணா ..
விழியால் படம் பிடித்தேன்
நகலை மனதில் பதித்திடுவேன்

என் ராஜாவின் ரோஜா நானே ...!



முழுமதி  நிலவே,
இரவுகள் உனதே,
உறக்கம் துளைத்தேன் ,
உன்னோடு கவி  களித்தேன்..!

தனிமையில் சிரித்தேன்,
தலைவனை நினைத்தேன்,
ஏக்கம் துறந்தேன், 
கனவோடு காலம் கழித்தேன்

மழையில் நனைந்தேன்,
குடை தருவனா ?
போறானே வெயிலில் , நிழலாய்
வர வழிதருவனா ..?

பசி மறந்து போனேனே ,
பாவி கண்ணா ...
நித்தமும் உன்னை நினைத்தேனே 
மொத்தமும் பறி தவித்தேனே ..

மலர் தேடி தேன் குடிக்கும்
வண்டை போல,
என்னை நோக்கி காதல் பொழிய
அவனே  வருவான் ...!

என் ராஜாவின் ரோஜா நானே ..!


முழுமதி  நிலவே,
இரவுகள் உனதே,
உறக்கம் துளைத்தேன் ,
உன்னோடு கவி  களித்தேன்..!

தனிமையில் சிரித்தேன்,
தலைவனை நினைத்தேன்,
ஏக்கம் துறந்தேன், 
கனவோடு காலம் கழித்தேன்

Friday 13 October 2017

தீபாவளி

இந்த தீபாவளி அண்ணன் தீபாவளி
உங்கள் தோட்டத்தில் பூத்த மலர்களை
பறித்து மாலை கொர்த்தேன்
உடன் என் அன்பை சேர்த்தேன்
உங்கள் தம்பியின் தீபாவளி வாழ்த்து மாலை..

போன தீபாவளிக்கு தனியா
கொடியை நட்டவன்
இந்த முறை ரெண்டா வரான்
மாயோன் காளை மெர்சலா வாரான்
மேயாத மானை கூட்டிக்கொண்டு வாரன்

ஆலபோரான் தமிழன் இசை பாட்டால
மெர்சல் அரசன் புயல் பேச்சால
நீதானே நெஞ்சை தட்டும் சத்தம்
மாச்சோ மச்சச்சோ காதல் யுத்தம்

தங்கச்சி எல்லோருக்கும் 
நீ ரத்தன கட்டி
அட்ரஸ் சாங் தந்த
எங்க சிங்க குட்டி

மேகமோ  அவள் மழை பொழிய
வருவான் மாயோன் கவி பொழிய ...

அன்புடன்,
இரா.சீ.சுகுமாரன்..


Tuesday 3 October 2017

பிரியமான தோழிக்கு

Image result for rowdy than


ஆளுக்கும்  வாய்க்கும்
சம்மந்தமே  இல்லை ..!
பழகாத வரைக்கும்
தெரியப்போவதும் இல்லை ..!

விளயாட்டு  பேருல
சேட்டை  பண்ணும் தொல்லை
சும்மா சொன்னேன்  ROWDY
நீ பாசக்கார பிள்ளை ...!

அரை கிலோ எடை ஏறினாலும்
ஆறு நாளைக்கு  பீல் பண்ணுவ..,
உனக்கு ஜிம் ஒரு கேடா ..?
கதவை தொறக்கவே 2 பேரு  கேட்ப ..!

கொஞ்சம்  நெஞ்சமா  பண்ணி இருக்க
அவ்ளோவும்  Torture -U
All the best for your
Beautiful Future-U

கொஞ்சம் செண்டிமெண்ட்  எடுத்துக்குறேன் ..,

கடந்து வந்த  பாதையை
படிக்கட்டுகள்  சொல்லும் ,
கதை அடித்த காலத்தை
டீ கடைகள் காட்டும் ,
நான் என்ன செய்கிறேன் என்று
நீ எட்டி பார்ப்பதும் ..,
நீ என்ன செய்கிறாய் என்று
நான் தட்டி கேட்பதும் ..,
சுவாரசியமான  நிமிடங்கள்
இனி கிடைக்குமா
அந்த தருணங்கள் ...?

ஒரு நாள் நீ  விடுப்பு எடுத்தாலும்
கடுப்பில் திரியும் எனக்கு ,
மொத்தமா விட்டுட்டு போறியே
இது யாரு போட்ட கணக்கு ..?

கிண்டர் ஜாய் சாப்பிடும் குட்டி பொண்ணு ..,
அடிக்கடி நாம மீட் பண்ணலாம்  கண்ணு ..
மறக்காம ஒழுங்கா  டெய்லி போன் பண்ணு ..

சீன கொறச்சிகோ
கொஞ்சம் சிரிச்சிக்கோ
வைட்டமின் -D  சேத்துக்கோ
ஒடம்ப நல்லா பாத்துக்கோ ..!

என்றும் பிரியமுடன் ,
இரா.சி .சுகுமாரன்

Monday 25 September 2017

ரசிகனின் வேண்டுகோள்

Related image

படம் பண்ணி  இருக்கீங்க
பணம் பண்ணி  இருக்கீங்க
 அப்போ அப்போ
கண்ணனுக்கு தெரியாம
எங்களுக்கு உதவியும்
பண்ணி இருக்கீங்க ...!

உண்மையில் அரசியல்
பண்ண நினைத்தால் ..,
அன்றே  வந்து இருக்க வேண்டும் ..
இன்று வரை நீங்கள்
எங்கள் பிரச்சனைகளுக்கு
பெருசா  குரல் குடுக்கலையே ..!

படுத்து கிடந்த உங்கள
திரும்பி பெற  நாங்கள்
மொட்டை போட்டோம்
மண் சோறு உண்டோம்
கல்லுப்பு மேல முட்டியிட்டு
மலை கோவில் படி ஏறினோம்

மீண்டு வந்த நீங்க
தமிழ் நாட்டு ரசிகர்கள்
பெருமை படர மாரி நடந்துக்குவேன் னு சொல்லி இருக்கீங்க ..!
ஆனா செஞ்சி இருக்கீங்களா ..!

இலவச மருத்துவம் , கல்வி
வேலைவாய்ப்பு தர
இதுவரைக்கும் நீங்க முன் வரலையே..!

பிரச்சனைகளுக்கு  வாய் திரவளை ..!
உதவிகளுக்கு  மனம்  திரவளை ..!
அரசியலுக்கு  மட்டும்  கண்  திரவலாமா?

வேண்டாம்  தலைவா ..,
எல்லாம்  சம்பாதித்த  நீங்கள்
வெறுப்பையும் சம்பாதிக்காதீங்க ..!
உமக்கு அரசியல் வேணாம் தலைவா .!!

                                    ----------இரா .சீ .சுகுமாரன்