Thursday 31 August 2017

பிரிவோம் சந்திப்போம்



Related image


சுபம் தந்து விடைபெற தோணாத
சுகம் நீ .., பெண்ணே

கரம் நீட்டி தொட அருகில் இல்லாமலும்
என் அகம் நீ ..., கண்ணே

மழை  நீரில் ஊரே  நனைந்திருக்க
நான் மட்டும்  கண்ணீரில்
கூடு  கட்டி  வாழ்கிறேன்

பெண்ணே, உன்னை பார்க்காமல்
என் வானம் இங்கு விடியாது ..,

கண்ணே , உன் பேச்சை செவி
கேளாமல் என் இதயம் அது இயங்காது ...!





Monday 28 August 2017

தலை கைவசம் இருந்திருக்கும்

Related image




அம்மாவின்  அன்பும் ,
மனைவியின் மனசும் ,
மகளின் முத்தமும்

மொத்தம் சேர்த்து
சட்டைப்பையில் வைத்து
சிரித்த முகத்துடன்
கிளம்பிப்போனான்
"மகராசன் "

அவசரம் என்று
ஆட்டோவை முந்தி சென்றான்
எதிரில் வந்த லாரியை
வேகம் கூட்டி முட்டிவிட்டான்

மொத்த  உசுரும்  நின்னு போச்சு ,
கொண்டுவந்த சோறு மேல
இரத்தம் வாரி விசியாச்சு ..!

மழை பார்த்த பூமி
இப்போ இரத்தம்
கேட்க பழகிக்கொண்டது ..!
பொறுமை இழந்து
பயணம் செய்தவனை
மரண ஓலை முத்தமிட்டது ..!

கதறி அழுத குடும்பத்தோட
காட்சி கண்ணுக்குள்ள குடியிருக்க..,
கனவுல வந்து செத்தவன் சொன்னான்

"தலை கவசம் போட்டு இருந்தால்
தலை கைவசம் இருந்திருக்கும்"


Thursday 17 August 2017

தோழா நீ போராடு


Image result for eagle



உன் வாழ்வின் அர்த்தம் என்ன ?
நீயும் கொஞ்சம் தேடு ...
தோல்விகள் கண்டு துவண்டால் என்ன  ?
கவலை கடந்து ஓடு ...
கடந்த காலம் கூரும் காரணம் என்ன  ?
செவிகளை கொஞ்சம் மூடு ....
காலம் கடந்தும் காவியம் பாடும் ..,
தோழா நீ போராடு ...!    [உன் வாழ்வின் அர்த்தம் என்ன ? ]

மழைக்கு ஒதுங்கும் காகம் ஆகாதே
மேகம் தாண்டும் கழுகாய்  மாறு ..!
வலிகள் கொண்டு நீ சோகம் கொள்ளாதே
உளியின் முத்தம் கொண்டு சிலையாய்  மாறு ..!
வெற்றி என்பது எளிதில் சிக்காதே
தேன்கூட்டுக்கு ஆசைப்பட்டா தேனியாய் மாறு..!  [உன் வாழ்வின் அர்த்தம் என்ன ?]

பானையை உடைக்க இரும்புகள் எதற்கு ,
யானையை வீழ்த்த எறும்பே மோதும் ..!
இருளை விரட்ட சூரியன் எதற்கு ,
தீக்குச்சி தீட்டு , அதுவே  போதும்..!
அழகு என்பது நிறத்தில்  எதற்கு
சான்றாய்  தினமும் குயில்கள்  பாடும் ..!
களம் கண்டபின் கருணை எதற்கு ,
வாலினை வீசு .., வெற்றிகள்  கூடும் ..!   [உன் வாழ்வின் அர்த்தம் என்ன ?]
-          இரா.சீ .சுகுமாரன்



Monday 14 August 2017

வந்தே மாதரம்


இந்த
தேசம் எங்கள் தேசம்,
எங்கும்
பூக்கள் வீசும் வாசம்,

நாங்கள் - பல கைகள்
கோர்த்து உரக்க  சொல்வோம்
"வாழ்க பாரதம்"

இந்த
பூமி எங்கள் பூமி,
இங்கு
அன்பு மட்டுமே சாமி,

நாங்கள் - கண்கள் மூடி
பிராத்தனை செய்வோம்
"வளர்க பாரதம்"

இந்த
நாடு புனித நாடு,
அழகான
புத்தர் வாழும் வீடு,

நாங்கள்மௌனம் கொண்டு
தியானம் புரிவோம்
"வெல்க பாரதம்"

கொடியின்
வர்ணம் மூன்று,
அதனை
இணைத்த சக்கரம் ஒன்று

அதன் - அர்த்தம் அறிந்தோம்  
மதத்தை தூரந்தோம்
"வெண்மை பாரதம்

வலிமை கொண்டும்
அமைதி கண்டோம்
காந்தி சொன்ன
வழியில் நின்றோம்

நாங்கள் - அறவழியில்
போராடி வென்றோம்
"வெற்றி பாரதம்"

காலம் கடந்தும்
உலகமே சொல்லும்
கலாம் கண்ட
கனவுகள் வெல்லும்

நாங்கள்நித்தமும்
சத்தமாய்  சொல்வோம்
"வந்தே  மாதரம்"

     - இரா.சீ.சுகுமாரன்